அசோக் நகரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று.!

சென்னை அசோக் நகரில் 11-வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கியவர்கள், அதே பகுதியில் காய்கறி கடையில் காய் வாங்கியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக நாளுக்குநாள் பதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் 231 பேருக்கு ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், அதிகமாக பாதிக்கப்படுவது சென்னை தான், நேற்று மட்டுமே சென்னையில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல நேற்று முன்தினம் சென்னையில் 176 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று வரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், தினமும் பாதிக்கப்படும் கொரோனா பாதிப்பில் கிட்டத்தட்ட 90% பேர் சென்னையை சார்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை அசோக் நகரில் 11-வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கியவர்கள், அதே பகுதியில் காய்கறி கடையில் காய் வாங்கியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025