பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பிரசவத்திற்காக மருத்துவமனை வந்திருந்த வால்பாறையை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், அந்த இளம்பெண்ணை பார்க்க வந்த உறவினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இளம்பெண்ணிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…