நாகை மாவட்டத்தில் 8வது நாளாக மீனவர்கள் முடங்கியுள்ளனர். இதனால் ரூ10 கோடி வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தங்களது வாழ்வாதாரதிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என கடந்த 19ம் தேதி மாலை முடிவு செய்தனர். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை பஞ்சாயத்தார் மூலமாக திரும்ப வர அழைப்பு விடுக்கப்பட்டது. சரியாக மார்ச்.,20ம் தேதியிலிருந்து மீன் இறங்குதளம், ஏலம் விடும் இடம் என ஒட்டுமொத்தமாக மூடினர்.மேலும் படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தியுள்ளனர்.இம்மாவட்டத்தில் உள்ள 59 மீனவ கிராமங்களில் 1500 விசைப்படகுகள், 3ஆயிரம் பைபர் படகுகள், 1500 கட்டுமரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மீனவர்கள் அன்றாடம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர் .அதே போல் மீன்பிடி தொடர்பாக 1 லட்சம் பேர் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் தற்போது வரை இருந்து வருகின்றனர். இன்றுடன் 8வது நாளாக ஓய்வில் இருந்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தினமும் ரூ.1 கோடி முதல் ரூ.1 கோடியே 50 லட்சம் வரையிலான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதுநாள் வரை சுமார் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மீன்பிடி தொழிலை சார்ந்த மற்ற தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று நாகை மீனவர்கள் அரசிற்கும் ,மீன்வளத்துறைக்கும் கோரிக்கை வைக்கின்றனர்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…