கொரோனா ஆய்வு: சென்னைக்கு புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக குழு.!
கொரோனாவை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட என்று இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் 23,077 பேர் பாதிக்கப்பட்டு, 718 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,430 பாதிக்கப்பட்டுள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அகமதாபாத், சூரத், ஹைதராபாத், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நகரங்களுக்கும் மத்திய உள்துறை குழு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,683 ஆகவும், உயிரிழப்பு 20 ஆகவும் உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை மாநகராட்சி பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.