வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன்
வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை தமிழகத்தில், 12,448 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 84 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 4,895 பேர் மருத்துவமனையை இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள், ‘தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு இன்று முதல் வீடு வீடாக சென்று தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து சோதனைகள் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.