கொரோனா தடுப்பு : ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருடனான ஆலோசனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக தகவல் வந்துள்ளது.