தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை.!
தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885-ஆக அதிகரித்துள்ளது.
இதில், சென்னையில் இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தமாக 1020 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 838 ஆக உள்ளது.