தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து இன்று மட்டும் 489 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 688 பேரில் 87 வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 10,333 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,48,174 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 7,466 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…