தமிழகத்தில் இன்றும் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இன்று சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,692 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 47 பேர் இருக்கின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,850 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 93,189 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,058 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. அதில், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 56 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 65 ஆகவும் உள்ளது. இதையயடுத்து 13 லிருந்து 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,697 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 240 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…