தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் 1,596 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 23,760 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 155 பேர் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 87,159 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டுமே 5,978 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 59,023 பேரின் மாதிரிகள் பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,629 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 946 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் ஐசோலேசன் வார்டியில் 1,878 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…