தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2 பேர் பலி.!

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். தேனியில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவர், டெல்லி சென்று திரும்பியவர் என்றும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே கொரோனா பாதிப்பால் இன்று விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 51 வயது பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனவால் 2 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் முதல் உயிரிழப்பு மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு 485 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
April 13, 2025