தமிழகத்தில் கொரோனா : குணமடைந்தவர்கள் 866! சிகிச்சை பெறுபவர்கள் 864!
தமிழகத்தில் இதுவரை 866 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 864-ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,755-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சிறிது மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், இன்று மட்டுமே 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 866 பேர் குணமடைந்து உள்ளார்கள். தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 864-ஆக உள்ளது.