புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 2 பேரில் ஒருவர் செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபரும், மற்றோருவர் குச்சிபாளையத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசால் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் காரைக்கால் மற்றும் ஏனாமில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அந்த இரண்டு பகுதிகளும் தொடர்ந்து பச்சை மண்டலமாக இருந்து வருகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருவதை தடுத்ததாலேயே இதை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், மத்திய அரசு இதுவரை நிதி ஏதும் வழங்கவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…