இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. கொரோனா பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரு நாளில் 13,413 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 222 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…