கொரோனா எதிரொலியால் தமிழக – கேரள எல்லை மூடல்!
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக – கேரள எல்லையை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.