தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 லிருந்து 1,477 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 1,372 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 46 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 411 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரசால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னையில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தஞ்சையில் 10 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 46 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 5 பேருக்கு உறுதியானதையடுத்து 133 ஆக உள்ளது. வீட்டு கண்காணிப்பில் 21,381 பேரும், அரசு கண்காணிப்பில் 20 பேரும் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 40,876 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இன்று மட்டும் 5,744 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா வார்டில் தற்போது 1048 பேர் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து இதுவரை 85,253 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…