தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்புஏற்பட்டுள்ளது.அரியலூர்,செங்கல்பட்டு,சென்னை,கடலூர்,திண்டுக்கல்,கரூர்,மதுரை,பெரம்பலூர்,ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,தென்காசி,தஞ்சாவூர்,திருப்பத்தூர்,திருவள்ளூர்,திருவண்ணாமலை,திருவாரூர்,திருச்சி,விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.மொத்தம் அங்கு 1724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலூரில் இன்று 122 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 161 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அங்கு 135 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…