சென்னையில் கொரானா தொற்று சமூக பரவல் ஏற்படவில்லை -அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் கொரானா தொற்று சமூக பரவல் ஏற்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும், நிச்சயம் அது பற்றி மத்திய அரசிடம் நாங்கள் எடுத்துரைப்போம்.
மேலும் சென்னையில் கொரானா தொற்று சமூக பரவல் ஏற்படவில்லை .கொரோனா தொடர்பாக எதிர் கட்சிகள் நீதிமன்றம் சென்றால் அதை சந்திக்க தயாராக உள்ளோம். எதிர் கட்சி தலைவர் கருத்து இப்போது தேவை இல்லை மருத்துவ குழு ஆலோசனை தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.