நாகையிலும் முழு ஊரடங்கு உத்தவு – மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர்
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நாளை முதல் நாகையிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 1077 மற்றும் 04365-251992 எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால் மற்றும் மருந்து பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்