தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக அதிகரிப்பு – பீலா ராஜேஷ்
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது.
#UPDATE: 50 new #COVID19 positive cases in TN. 45 of them have travel history to Delhi. All admitted in Kanyakumari, Tirunelveli, Chennai and Namakkal hospitals and are stable. Will update details soon @MoHFW_INDIA #Vijayabaskar #Corona #CoronavirusOutbreak
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 31, 2020
மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மீதமுள்ள 616 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கொரோனா பாதிப்புள்ள 50 பேரில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.