சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று கொரோனா வைரசால் 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,252 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,559 பேரும், திரு.வி.க. நகரில் 1,325 பேரும், தேனாம்பேட்டையில் 1,317 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,262 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1046 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…