தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த நோயானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதன் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவி வருகின்ற நிலையில், அந்தந்த நாட்டு அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் 9 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விபரம்
- சென்னை – 5 (ஒருவர் குணமாகியுள்ளார்)
- ஈரோடு – 2
- கோவை – 1
- திருநெல்வேலி – 1