தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றோருவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய 49 வயது ஆண், வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரும் வெளிநாட்டிலிருந்து மத்திய கிழக்கு வழியாக பயணம் செய்து வந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேருக்கு உறுதியானது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 3 பேர் குணமடைந்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ரூ.497.06 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.280.38…
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அந்த குற்றங்கள்…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்துள்ள சமயத்தில் வெயிலின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…