தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உள்ளது.273 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் ஏற்கனவே 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 969 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டுமே 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்து வந்தது.இந்நிலையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.