வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு – முதல்வர்

Default Image

வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது – முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில், 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது பேசிய முதலவர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் தொற்று அதிகம் பரவியுள்ளது. தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சிறப்புக்குழு, மருத்துவக்குழு, தலைமை செயலாளர் மற்றும் ஆட்சியர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். கொரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வெளியேரிய நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 3371 வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளது. மும்மடிப்பு முகக்கவசங்கள் 32 லட்சம், என்.95 முகக்கவசங்கள் 3.5 லட்சம் கையிருப்பில் உள்ளது. அரசின் நடவடிக்கையால் உணவுப்பொருட்கள்,காய்கறிகளின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கும் இடையூறின்றி உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

நாள்தோறும் சுமார் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரம், காவல், வருவாய் என அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மருத்துவர்களின் கடும் முயற்சியால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்