தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்தது!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,782 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது. இது, மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.