ராயபுரத்தில் 1,000 -த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
சென்னை ராயபுரத்தில் 1,000-த்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தினந்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது.கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது .தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சென்னையை பொறுத்தவரை 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சென்னையில் 5625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது . 895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2வது இடத்திலும், 699 பேருடன் திரு.வி.க.நகர் 3ம் இடத்திலும் உள்ளது.தேனாம்பேட்டை- 608 பேர் , அண்ணா நகர்- 468 பேர், வளசரவாக்கம்- 461 பேர் , தண்டையார்பேட்டை- 437 பேர், அடையாறு- 276 பேர், திருவொற்றியூர்- 127 பேர், மாதவரம்-85 பேர், மணலி- 75 பேர், பெருங்குடி- 72 பேர், ஆலந்தூர்- 67 பேர், சோழிங்கநல்லூர்-64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.