இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா ..! தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கிய சீரம் நிறுவனம்…!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால், மீண்டும் சீரம் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது.
சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை வருவதோடு, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் தடுப்பூசி உற்பத்தி தொடக்கம்
கடந்த 24 மணி இந்தியாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, கோவிசீல்டு உற்பத்தியை மீண்டும் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசியான கோவிசீல்டு உற்பத்தியை மீண்டும் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளதால், 90 நாட்களில் ஆறு முதல் ஏழு மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்கும். கோவொவெக்ஸ் தடுப்பூசியின் 6 மில்லியன் பூஸ்டர் டோஸ்கள் சீரம் நிறுவனத்தில் கையிருப்பில் உள்ளன.