தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பு 800-ஐ தாண்டி வருகிறது. கடந்த ஆண்டை போல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதில், வங்கிகள், பள்ளிகளிலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபம்கள், சுற்றுலா தலங்களை அரசுத்துறைகள் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மக்கள் கூடும் இடங்கள், பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களில் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும். முககவசம் இன்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்றதே கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…