மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா பாதித்தவர்கள் அறிகுறி இல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாதீர்கள். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
தொற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா வார்டுகளுக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளோம். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 14 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கூடுதலாக நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். 200 வார்டுகளிலும் 400 காய்ச்சல் முகாம்களை நடத்தி தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தெருக்களில் தன்னார்வலர்களை கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம்.
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…