சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உள்ளது.எனவே ஒமந்தூரார், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பியுள்ளது.இதனால் சென்னையில் உள்ள உரிமையாளர்களிடம் மாநகராட்சி பள்ளிகள்,திருமண மண்டபங்களை ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதற்கு மத்திய குழு பாராட்டி உள்ளது .எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.