வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
சென்னையில்செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வாக்காளர்கள் நாளை மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின் போது கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோய் பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்.
தேர்தலுக்குப் பிறகு 7-ம் தேதியிலிருந்து கொரோனாவை தடுக்க வீடுவீடாக காய்ச்சல் குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும், தினமும் 15 ஆயிரம் பேர் தான் தடுப்புசி போடுகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துகிறது. மாஸ்க், சானிடைசர், கவச உடை உள்ளிட்டவை அடங்கிய கிட் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…