1.5 கோடி ரூபாய் செலவில் திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மையம்.!

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக்கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் (PCR டெஸ்டிங் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பத்தூரில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு முன்னர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டதிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படும், இதனால், முடிவு தெரிய நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.
இனி திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் முடிவு விரைவில் தெரியவரும் என திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025