கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.இதனால் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக அறிவித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. பொது சுகாதார சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் பட்டியலில் கொரோனா சேர்த்துள்ளது தமிழக அரசு.