உலகம் முழுவதும் தனது கோரத்தால் உயிர்களை குடித்து வரும் நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையானது உலகளவில் 25,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக 5,31,799 பேர் உலகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியுள்ள கொரோனா தாக்குதலுக்கு 19 பேர் மடிந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 35 ஆக கூடியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 144 தடையால் அத்தியாவசியங்கள் குறித்து அரசு கவனமுடன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், மருந்து கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன் காரணமாக வைத்து சிலர் தவறாக சாலைகளில் சுற்றி திரிவதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது இந்த அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதனபடி ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…