தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு 

Corona Virus Update 3
[File Image]

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்பு 2 ஆக இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு அந்த காய்ச்சல் பரவாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்