#Breaking : தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,783 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,820 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,04,186பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85,974 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 52,98,508 ஆக உள்ளது. மேலும், தற்போது 51,458 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025