உயிரைக் காக்க!மீண்டும் களத்திற்கு வாருங்கள்..!ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தனியார் மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அரசுடன் கைக்கோர்த்து பணியாற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்றே இந்தியாவில் தலைத்தூக்க துவங்கி உள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கை தேவை என்று கூறிவரும் நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் இதே நிலைத் தொடர்ந்தால் எப்ரல் மே மாதத்தில் 13 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முனைப்போடு விரைவாக செயல்படுத்தி வருகிறது.தற்போது நாட்டு மக்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க தனியார் மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அரசுடன் கைக்கோர்த்து பணியாற்ற வாருங்கள் என்று மத்திய அரசு அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025