கொரோனா எதிர்கொள்ள தமிழகத்தில் அமைகிறது 4 புதிய மருத்துவமனைகள்-முதல்வர் ஆலோசனை

Default Image

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சென்னையில் அதற்காக பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.

கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் நேற்று மாலை6 முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்த நிலையில் அது குறித்த அரசாணையையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் தலைநகர் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தர தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும்,

  அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தமிழகத்தில் புதியதாக 4 மருத்துவமனைகளை அமைக்க உள்ளதாகவும் அதன்படி தாம்பரம் சானிடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவுக்காக மருத்துவமனை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்