கொரோனா வைரஸ் காலர் டியூன் ! தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக அந்தெந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.மேலும் இந்த மனுவில், எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.