தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 605 பேரில்! வெளியே சுற்றி திருந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக கூறி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்துள்ளனர்.இன்று ஒருவர் நேற்று ஒருவர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவ பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேர் வெளியே சுற்றித்திரிந்ததாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது.திருவாரூர் மாவட்டத்திற்கு பல நாடுகளில் பணிபுரிந்த 605 பேர் தங்களது சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவர்கள் அனைவரையும் வீட்டியிலே மருத்துவரின் அறிவுறுத்தல் படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களில் 5 பேர் வீட்டில் இருந்து வெளியேறி சுற்றி திரிந்தாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனாவின் வீரியத்தை தெரிந்தும் இவ்வாறு சுற்றி திரிவது நியாமா?? அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் வைரஸ் பரவினால் நிலை என்னவாகும்?? கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம் அதனை உணர்ந்தே மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து வருகிறது.ஆனால் இதன் விரீயத்தை சற்றும் உணராமல் இவர்களை போன்றவர்களின் செயலால் இன்று இத்தாலியின் நிலையை எண்ணி பாருங்கள்.கட்டுப்பட்டுக்குள் வைக்க நாம் தவறினால் பெரும் விளைவுகளை இந்தியா சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.பெரும் குடும்பம் நமது நாடு பாதித்தால் என்னவாகும் நாடு?? சிந்தியுங்கள்..வீட்டிலேயே இருங்கள்..