21,000 தாண்டிய கொரோனா பாதிப்பு-கொலை நடுக்கத்தில் நாடுகள்

Default Image
கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த கொலைக்கார கொரோன வைரஸ் உலகம் முழுவதையும் கடும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.இந்த  வைரசின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவை விட  இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தான் கொரோனாவின் கொரத்தாண்டவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவை சின்னபின்னாமாக்கிய இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன்படி நேற்று ஒரு நாளில் 6 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரே நாளில் புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 683 பேர் அங்கு மடிந்துள்ளனர். அதே போல் வல்லரசு நாடாகவும் தனது பலத்தை நிமிர்த்தி நாடுகளுக்கு காட்டி வந்த அமெரிக்காவை விட்டுவைக்கவில்லை கொரோனா அங்கு வைரசை கட்டுப்படுத்த தெரியாமல் வல்லரசு நாடு விழிபிதுங்கிய நிலையில்  நிற்கிறது. அதன்படி நேற்று ஒரு நாளில் மட்டும்  அமெரிக்காவில் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதில் 944 பேர் கொலைக்கார கொரோனாவால் மடிந்துள்ளனர். 
 
அதே போல் ஸ்பெயினும் இந்த வைரஸ் பாதிப்பால் நிலை குலைந்துள்ளது. அங்கும்  புதிதாக 7,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  மொத்தமாக ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,647 பேர் மடிந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் இந்தியாவில் 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது இரண்டே நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும் 12 பேர் மடிந்துள்ளனர்.அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறினால் பாதிப்பை எண்ணி பார்க்க முடியாத வகையில் இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் எனவே அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலமே கட்டுப்படுத்தமுடியும்.உங்கள் ஒருவரால் ஒட்டு மொத்த நாடும்  அநிநியாமாக பாதிக்கப்பட வேண்டுமா?? என்று சிந்தியுங்கள் இவ்வாறு  உலக நாடுகளே என்ன செய்வது என்று தெரியாமல் மக்களை பாதுக்காக்க அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும்  உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது  21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதே போல் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 468,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நம்பிக்கை அளிக்கும் விதமாக 114,218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்