கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணமாக உலக முழுவதிலும் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதுடன்,மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவிய இந்நோயால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல விழிப்புணர்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழக முதல்வரின் உத்தரவு படி தமிழகம் முழுவதும்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.இவ்வாறு மக்கள் தொகை அதிக கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பட்டுத்த அரசுகள் தங்களது முழு முயற்சியில் இறங்கினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை,பொதுமக்கள் பலர் வீரியத்தினை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.சிலர் இன்னும் விழிப்புணர்வின்றி செயல்படுகின்றனர்.இதனையும் கட்டுபடுத்த சென்னை காவல் ஆணையர் ஒரு கடுமையான உத்தரவினையும்,அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.அதன்படி தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பொதுமக்கள் நலன், பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த உத்தரவினை பிறப்பித்ததாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…