144 தடை..தெருவோரவாசிகளின் நிலை..மனம் இருந்தால் உதவிகரம்-தொடர்பு கொள்ளுங்கள் 1913 or 044-25384520 நம்பருக்கு.,-மாநகராட்சி
கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு போன்ற நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருட்களை முடிந்தால் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவற்று இருப்பவர்களை அழைத்து சென்று சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆதவற்ற இவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் இத்தையோர்க்கு உதவ நினைக்கும் தனி நபர்,தனியார் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து நேரடியாக தங்களால் இயன்றதை செய்யலாம் மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்ற எண்ணிற்கோ அல்லது 044-25384520 என்ற எண்ணிற்கோ தொடர்புகொண்டு த்ங்களால் முடிந்ததைக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களாக கொடுக்க நினைப்பவர்கள் அரிசி,பருப்பு, எண்ணெய், பால் பவுடர் சாம்பார், ரசப் பொடி,நாப்கின், கோதுமை மாவு, சோப்பு போன்றவற்றை கொடுக்காலம் என்று மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.