முடங்குகிறதா!??-3 மாவட்டங்கள்..இன்று முதல்வர் முக்கிய முடிவு!அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது..
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நேற்று மக்கள் சுயஊரடங்கை கடைப்பிடித்தனர்.இதன் விளைவாக நேற்று இந்தியாவே ஒரு நாள் ஸ்தம்பித்து போனது என்று கூட கூறலாம்.ஆனால் பொதுமக்கள் இந்த சுய ஊரடங்கை மிக பொறுப்புடன் செய்து வெற்றியடைய செய்துள்ளனர்.இதற்கு எல்லாம் மூலக்காரணமாக இந்தியா முழுவது தற்போது வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் என நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி வைக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு ஆலோசனையை வழங்கி உள்ளது.இதன்படி பிரதமரின் முதன்மைச் செயலாளர், மந்திரி சபை செயலாளர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.அதில் அதிவேகமாக நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் உயிர் இழப்பு ஏற்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடிய 80 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை மட்டும் அனுமதிப்பது குறித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.நிலவும் சூழ்நிலையை பொறுத்து இந்த மாவட்டங்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிகரித்துக் கொள்ளலாம் என்ற யோசனையையும் தெரிவித்துள்ளது. மேலும் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை வரும் மார்ச்.,31ந் தேதி வரை நிறுத்தம் செய்வது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ள 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்படும் என தெரிய வருகிறது.இந்நிலையில் மத்திய அரசின் அறிவுரை குறித்து தமிழக அரசு அதிதீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.