முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் முழுஉரடங்கை அறிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் முழுஉரடங்கை அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு காலத்திலும் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி போடப்படும். ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில் எடுக்கப்படும். சென்னை, கீழ்பாக்கத்தை போல் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டேசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
தொடக்கநிலை கொரோனா பாதிப்பாளர்களுக்கு உதவுவதற்கு, சித்தாவையும், ஆயுர் வேதத்தையும் பயன்படுத்தி, சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்படும். ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், எங்கள் தொடர்புகொண்டால் உடனடியாக பூர்த்தி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.