கொரோனா தடுப்பூசி : வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்…!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள், சென்னை கோயம்பேட்டில், வீடு வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள், சென்னை கோயம்பேட்டில், வீடு வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும், மக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.