தமிழகத்தில் ஜனவரி 8 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய அடுத்த நாளே மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களில் ஜனவரி 2-ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய அடுத்த நாளே மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்க உள்ளது. ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படவுள்ளது.ஜனவரி 8 -ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.மத்திய அரசின் வழிகாட்டுதல் படி முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.