சென்னையில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது, 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 7,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் உள்ள 23 ஆயிரம் காவலர்களில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கு அவகாசம் உள்ளதால் அதற்கேற்ப காவலர்கள் அடுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலர்கள் சிலருக்கு கூட தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 3,609 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் தற்போது 258 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்பால் இதுவரை காவல்துறை சார்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…