சென்னையில் காரிலேயே கொரோனா சிகிக்சை – மாநகராட்சி அறிமுகம்..!
சென்னையில் காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்வதற்கு ஏதுவாக கொரோனா மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி திட்டத்தை தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி செய்து சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்காக மாநகராட்சி இந்த ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் 15 கொரோனா மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவ மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி எண்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் உட்பட நோயாளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.
கொரனோ பரிசோதனை செய்யும்போது அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று சென்னையில் உள்ள அனைத்து மண்டலத்திற்கு 30,000 தடுப்பு மருந்துகள் அனுப்பட்டுள்ளது என தெரிவித்தார். பரிசோதனை செய்யும்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே சிகிச்சை தொடங்கி விடுவதால்கொரோனா பரவல் குறையும். முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் நிலைமை மோசம் அடைவதை தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனைக்கு வரும் பணியாளர்களும் மூலம் தடுப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் மறைக்கக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மண்டல வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தினசரி ஆலோசனை வழங்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.